டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, ராஜஸ்தான்-ஹரியானா எல்லையில் 14-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியின் எல்லைகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, ஹரியானா-ராஜஸ்தான் எல்லையான ஷாஜகான்பூர் பகுதியில், கடந்த 14-ம் தேதி விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர். இப்போராட்டம் 14-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. Jaipur-Delhi தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டுள்ள விவசாயிகள், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.