டெல்லியில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
தலைநகர் டெல்லி குளிருக்கு பெயர்போன நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு குளிரின் நிலை ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும் இந்த ஆண்டு சற்று அதிகமாகவே குளிர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த அக்டோபர் மாதம் முந்தைய ஆண்டுகளில் அக்டோபர் மாதத்தை விட அதிக அளவு குளிரை பதிவு செய்ததது. இதே போல இந்த நவம்பர் மாதத்தின் நேற்றைய தினம் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத நவம்பர் மாத குளிரை பதிவு செய்துள்ளது.
நேற்று காலை தலைநகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 6.3 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி உள்ளது. இன்று அதிகாலை குறைந்தபட்சமாக 10 டிகிரி செல்சியசும் அதிகபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர்.