Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லி அணியில் இணையும் மிட்செல் மார்ஷ்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வென்ற பிறகு ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்நிலையில் காயம் ஏற்பட்டதால் டி20 போட்டியில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகினார். ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷை 6.5 கோடிக்கு டெல்லி அணி விலைக்கு வாங்கியது. சர்வதேச போட்டி இருப்பதால் முதல் ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது  மிட்செல் மார்ஷல் டெல்லி அணியுடன் இணைகிறார் என்பது தெரியவந்துள்ளது. டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட்டாக இருக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நியூ சவுத் வேல்ஸ் அணியின் பிசியோதெரப்பியுமான பேட் பர்காட் தனிமைபடுத்தும் சமயத்தில் மிட்செல் மார்ஷை  காயத்தில் இருந்து மீட்டெடுப்பர் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஐபிஎல் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் மிட்செல் மார்ஷல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இந்நிலையில் மிட்செல் மார்ஷ் தெரிவித்ததாவது பாகிஸ்தான் தொடரில் விளையாடாதது மிகுந்த வருத்தமாக உள்ளது. ஆஸ்திரேலியா அணியின் அடுத்த தொடருக்காக எதிர் நோக்கி உள்ளேன் என மிட்செல் மார்ஷ் கூறினார். மிட்செல் மார்ஷல் மிக சிறந்த ஆட்ட வீரராக இருந்து வருகிறார். டி 20 யின் கடைசி ஆட்டத்தில் இவரின் பங்கு அதிகமாக இடம்பெற்றுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 77 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். முதல் போட்டில் டெல்லி அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |