ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் டெல்லி அணி வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்-ரவுண்டர். இதனையடுத்து டெல்லி வீரர்களை அவர்கள் தங்கியிருக்கும் அறைகளிலேயே இருக்கும்படி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
இன்று நடைபெறும் போட்டிக்காக புனே செல்ல தயாராக இருந்த வீரர்கள் அறைகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தொற்றுபாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகே போட்டி நடக்கும் இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதனால் இன்று ஐபிஎல் போட்டி நடக்குமா என்று ரசிகர்கள் அனைவரும் சந்தேகத்தில் உள்ளனர்.