Categories
தேசிய செய்திகள்

டெல்லி: அரசு ஊழியர்களுக்கு WORK FROM HOME…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால் நாளை முதல் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை தொடர்ந்து காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் காற்று மாசு மிக மோசமாக இருந்து வரும் நிலையில் டெல்லி அரசு முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் 50 சதவீதம் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என கூறியுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களும் இத்தகைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என நம் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |