Categories
அரசியல்

டெல்லி ஆதரவை பெற…. ரஜினியை காக்கா பிடித்த சசிகலா… அடுத்து என்ன நடக்கப் போகிறதோ? ….!!

அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதன்படி திங்கட்கிழமை அன்று ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சென்று பேசினார். ஏன் இந்த திடீர் சந்திப்பு என்று கேள்விகள் எழுந்தது. அதற்கு சசிகலா தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய ரஜினிகாந்திடம் நலம் விசாரிப்பதற்காக மற்றும் தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்காக வாழ்த்து தெரிவிப்பதற்காக சசிகலா சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ரஜினி அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டாலும் அரசியல் காந்த அலைகள் அவரை தொடர்ந்து சுற்றிவருகின்றன. தற்போது அவரது குரலுக்கு டெல்லி மேலிடம் முக்கியத்துவம் கொடுக்கும் என்று டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் சசிகலா ரஜினிகாந்தை சந்தித்து வந்ததை அதிமுக தலைமையை உண்ணிப்பாக கவனித்து வருகின்றது. இந்நிலையில் டெல்லியை தனது பக்கத்திற்கு திரும்பினால் மட்டுமே அதிமுக அலுவலகத்துக்குள் செல்ல முடியும் என்பதால் சசிகலா அதற்கான வேலைகளை தீவிரமாக செய்து வருகிறார்.

அதன்படி ரஜினிகாந்தை அவர் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, “டெல்லியில் எனக்காக பேசுங்கள் பிரிந்து இருக்கும் அதிமுகவை இணைத்தால் மக்களவை தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று கொடுக்க வேண்டியது என் பொறுப்பு” என்று சசிகலா கூறியுள்ளார். இதற்கு ரஜினிகாந்த் பிடி கொடுக்கவில்லை. ஆனால் லதா ரஜினிகாந்த் சசிகலாவுக்கு நம்பிக்கை வார்த்தைகளை சொல்லியுள்ளார். ரஜினிகாந்த் தனக்காக பேசவில்லை என்றால் எப்படியும் டெல்லி தரப்பிலிருந்து அவரை தொடர்பு கொண்டு சசிகலா என்ன சொன்னார் என்று கேட்பார்கள். அப்போது தான் சொன்னதை மட்டும் ரஜினி சொன்னால் போதும் என்று அவர் கணக்குப் போட்டுள்ளார். அவர் எதிர்பார்த்தது போலவே டெல்லிக்கு விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. எனவே டெல்லி இதில் என்ன முடிவடைகிறது என்று அடுத்தடுத்து தெரிந்துவிடும் என்கின்றார்கள்.

Categories

Tech |