போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன், மத்திய அரசு உடனடியாக நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து நான்காவது நாளாக போராட்டம் நடந்து வந்தது. இந்நிலையில் டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மத்திய அரசு நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதற்கிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசியஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் சௌரவ் பரத்வாஜ் ‘டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் பேச்சுவார்த்தைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உள்துறை மந்திரி அமித்ஷா ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருப்பது மிகவும் பொறுப்பற்ற செயல்’ என்று கூறினார். ஒரு பெரும் விவசாயிகளின் போராட்டத்தால் கொரோனா தொற்று பரவக் கூடும் என்று கூறும் அமித்ஷா.
மறுபுறம் ஹைதராபாத்தில் எந்த சமூக இடைவெளியும் இன்றி மாபெரும் தேர்தல் ஊர்வலத்தை நடத்துகிறார். விவசாயிகளை மறந்துவிட்டு ஹைதராபாத்தில் தண்ணீர் தேங்குவது, சாலை பள்ளங்கள் போன்றவை அமித்ஷா பேசிக் கொண்டிருக்கிறார் என்று சௌரவ் பரத்வாஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.