Categories
தேசிய செய்திகள்

“டெல்லி கலவரம்”…. 5 பேர் மீது பாய்ந்த தேசிய பாதுகாப்பு சட்டம்…. வெளியான தகவல்…..!!!!!!

டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில்சென்ற  சனிக்கிழமையன்று அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பெரும்பாலானோர் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர். அப்போது  செல்லும் வழியில் மற்றொரு பிரிவினருடன் மோதல் ஏற்பட்டதில் இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்கினர். மேலும் தீவைப்பு சம்பவங்களும் அரங்கேறியது. இது தொடர்பாக தகவலறிந்து வந்த காவல்துறையினர் இருதரப்பையும் கலைந்துபோக நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் காவல்துறையினர் மீதும் கற்கள் வீசி தாக்கப்பட்தோடு, அவர்கள் வாகனம் உட்பட பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கலவரக்காரர் ஒருவர் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் காயம் அடைந்தார்.  இந்த பயங்கர வன்முறை சம்பவத்தில் 8 காவல்துறையினர் உட்பட 9 பேர் காயமடைந்தனர். அத்துடன் பெரும்பாலான பொருட்களும் சேதப்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. அதனை தொடர்ந்து அங்கு கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் சம்பவ இடத்தில் பதற்றத்தை தணிக்க காவல்துறையினர் கொடி அணிவகுப்பு, ரோந்து என பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். டிரோன் கேமரா வாயிலாகவும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கலவரத்தின் முக்கியமான குற்றவாளிகளில் ஒருவரான அன்சார் (வயது 35) உள்பட 22 பேர் இதுவரையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 2 நபர்கள் சிறுவர்கள் ஆவர். இந்நிலையில் அன்சார் உட்பட  கைதானவர்களில் முக்கியமான குற்றவாளிகளாக உள்ள 5 நபர்கள் மீது தேசிய பாதுகாப்புசட்டம் பாய்ந்து இருக்கிறது. அதாவது இந்த  சட்டம் ஒருவரை எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லாமல் ஒரு ஆண்டு வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது.

Categories

Tech |