Categories
தேசிய செய்திகள்

டெல்லி காவல்துறையின் மெத்தனப் போக்குதான் பிரச்சனைக்கு காரணம் : உச்சநீதிமன்றம்!

டெல்லி வன்முறை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பீம்ஆர்மி அமைப்பின் தலைவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணை தொடங்கியது. டெல்லியில் நடைபெற்ற அனைத்தும் துரதிருஷ்டமான நிகழ்வுகள் என்றும், டெல்லி காவல்துறையின் மெத்தனப் போக்குதான் பிரச்சனைக்கு காரணம் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

இந்த வழக்கில் பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், வன்முறை தொடர்பான வழக்கிற்கும், ஷாகின்பாக் போராட்டதிற்கும் தொடர்பில்லை. வன்முறை வழக்கை டெல்லி நீதிமன்றம் விசாரித்து வருகிறது என கூறினார்.

மேலும் வன்முறையில் தலைமை காவலர் பலி, உயர் அதிகாரி படுகாயம் என்ற அரசு தரப்பு வாதம் செய்த நிலையில், அதற்கு நாங்களும் இதையே கேட்கிறோம்? ஏன் நிலைமையை கைமீறிப் போக விட்டீர்கள்? வன்முறை எடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் தாமதம்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் டெல்லி காவல்துறையின் மெத்தனப் போக்குதான் பிரச்சனைக்கு காரணம் என்று நீதிபதி கூறியுள்ளார்.

சட்டப்படி போலீஸ் தொடக்கத்திலேயே நடவடிக்கை எடுத்திருந்தால் கலவரம் ஏற்பட்டிருக்காது. கலவரத்தின் போது டெல்லி போலீஸ் திறமையின்றி செயல்பட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் வன்முறையின் போது உடனடி நடவடிக்கை எடுக்காமல், எதற்காக காத்திருக்க வேண்டும் என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்

 

Categories

Tech |