Categories
தேசிய செய்திகள்

குரங்கு அம்மை எதிரொலி…. 3 ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்ட அறைகள்…. வெளியான உத்தரவு….!!!!!

இந்தியாவில் சென்ற ஜூலை 14ம் தேதி குரங்கம்மை பாதிப்பு முதன்முறையாக உறுதிசெய்யப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரள மாநிலம் வயநாடு வந்த 35 வயது நபருக்கு குரங்கம்மை பாதிப்பானது உறுதிசெய்யப்பட்டது. அந்நபர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பிறகு குணமடைந்தார். இவரை தவிர்த்து கேரளாவில் மேலும் 4 நபர்களுக்கு குரங்கம்மை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் இதுவரையிலும் குரங்கம்மை உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 5 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோன்று தலை நகர் டெல்லியில் 2 பேருக்கு குரங்கம்மை உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில், இன்று டெல்லியில் வசிக்கும் நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவருக்கு இந்த பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதன்படி நாட்டில் குரங்கம்மை உறுதிசெய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 8 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் குரங்கம்மை நோய்பாதிப்புக்கு சிகிச்சையளிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் குரங்கம்மை சிகிச்சைக்காக டெல்லியிலுள்ள 3 தனியார் மருத்துவமனைகளில் தலா 10 அறை அமைக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவற்றில் குரங்கம்மை அறிகுறி இருப்பவர்களுக்காக 5 அறைகளையும், குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவர்களுக்காக 5 அறைகளையும் ஒதுக்கீடு செய்யவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |