2022 ஆம் ஆண்டு வருகிற 26ந் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளதோடு 27ந் தேதி நடைபெறவுள்ள முதல் போட்டியில் டெல்லி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றனர். டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஷேன் வாட்சன் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஷேன் வாட்சன் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: “இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களைக் கொண்ட பலமான அணிகளில் ஒன்று டெல்லி. டெல்லி கேபிடல் அணியின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ரிஷப் பண்ட் ஒரு சிறந்த வீரர் மட்டுமல்ல மிக அமைதியான ஒரு அணி தலைவர்.
ரிஷப் மற்றும் தோனி இருவரும் அற்புதமான திறன் கொண்ட வெவ்வேறு வகை வீரர்கள்.
(மறைந்த) ஷேன் வார்ன் ஒரு வியக்கத்தக்க அணித் தலைவர். சக வீரர்களின் திறமையை அவர் நம்பிவார். ஷேனுடனான எனது நினைவுகள் அவரது திடீர் மறைவுக்குப் பிறகு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது எனவும் சேன் வாட்சன் கூறியுள்ளார்.