டெல்லியில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுமென்று முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் ஜான்சி ராணி சாலையில் அனாஜ் மண்டி என்ற சந்தைப் பகுதி உள்ளது. இங்கு உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த தொழிலகத்தில் அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட பயங்கர தீ 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோக சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படுமென்றும் , காயமடைந்தவர்களுக்கு ரூ 1 லட்சம் நிதியுதவி வழங்கப்படுமென்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறித்துள்ளார்.