Categories
தேசிய செய்திகள்

டெல்லி தீ விபத்து -நிர்மலா சீதாராமன் இரங்கல் …!!

டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  இரங்கல் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் ஜான்சி ராணி சாலையில் அனாஜ் மண்டி என்ற சந்தைப் பகுதி உள்ளது. இங்கு உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த தொழிலகத்தில் அதிகாலை 5 மணிக்கு  ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்  43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோக சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

டெல்லி தீவிபத்து க்கான பட முடிவு

இந்த விபத்து குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் , இந்த சம்பவம் என் இதயத்தை உடைத்து விட்டது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |