டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 3 ஆம் ஆண்டு மாணவி ஒருவர் வசந்த்குஞ்ச் காவல் நிலையத்தில் பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் மாணவியுடன் படித்து வரும் சக மாணவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இதுபற்றி பிரிவு 354 ஏ மற்றும் 509 ஆகிய தண்டனைச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புகாரில் குற்றச்சாட்டப்பட்ட மாணவர் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் உறுப்பினர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகும் பல பிரச்சனைகள் நடந்து வருகின்றன. அதன்படி கடந்த ஏப்ரலில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த மதம் சார்ந்த நிகழ்ச்சியை முன்னிட்டு இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. அதில் ஒருவரை ஒருவர் கம்பு கடைகளில் தாக்கிக் கொண்டன. இந்த சம்பத்தில் மாணவ-மாணவிகள் உள்பட 60 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.