Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி பஞ்சாப்பை தொடர்ந்து….!! குஜராத்தை குறிவைக்கும் ஆம் ஆத்மி…!!

டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி அடுத்ததாக குஜராத்தில் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு குஜராத் மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை மனதில் வைத்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் குஜராத் வருகை தர உள்ளனர். கடந்த 1995ஆம் ஆண்டு முதல் குஜராத் பாஜக வசம் உள்ளது. இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவான் இரண்டு நாள் பயணமாக குஜராத் வருகை தர உள்ளனர்.

அங்கு அவர்கள் சபர்மதி ஆசிரமம் செல்லவுள்ளனர். அதன் பின்னர் “திரங்கா யாத்திரை” எனப்படும் வாகன பேரணி நடத்த உள்ளனர். அதைத் தொடர்ந்து நாளை அகமதாபாத்தில் உள்ள சுவாமிநாராயணன் கோவிலுக்கு செல்லவுள்ளனர். மறுபுறம் பாரதிய ஜனதா கட்சியும் தேர்தலுக்காக பல்வேறு கட்ட முன்னேற்பாடு பணிகளை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |