டெல்லி போராட்ட களத்தில் பயங்கரவாதிகள் பங்கேற்று உள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தற்போது வரை 78 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பங்கேற்க உள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் பங்கேற்றுள்ளது தொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.