மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார்.
கடந்த ஜனவரி 16-ம் தேதியில் இருந்து தடுப்பூசி இந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற இரு தடுப்பூசிகள் முதல் கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது. இது ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கும், இரண்டு கோடி முன்களபணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2-வது கட்டமாக 60 க்கும் மேற்பட்டவருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
முதல் நாள் பிரதமர் மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இரண்டாவது நாளான நேற்று முன்தினம் மூத்த அதிகாரிகள் ராஜ்நாத்சிங், டாக்டர் ஹர்ஷவர்தன், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் போட்டுக்கொண்டனர். மூன்றாவது நாளான நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் ராணுவ மருத்துவமனையில் தனது மகளுடன் சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டா.ர் இந்நிலையில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.