விவேக் அக்னிஹோத்ரியின் தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக யுவமோர்ச்சா அமைப்பினர் கடந்த புதன்கிழமை அன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து ஐபிசி 186, 188 மற்றும் 353 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது பொதுச் சொத்துக்கள் அழித்தல் தடுப்புச் சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு முன்பு நடந்த இந்த வன்முறை தாக்குதலில் 8 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டுள்ளதாகவும், இதையடுத்து சந்தேகப்படும் நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கெஜ்ரிவாலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளதாவது, காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை குறிப்பிட்டு நாட்டில் உள்ள இந்துக்களை கெஜ்ரிவால் அவமதித்து விட்டதாகவும், இதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்.
மேலும் கெஜ்ரிவால் எப்போதுமே தனது அற்ப அரசியல் மற்றும் அரசியல் நலன்களை நாட்டின் நலன்களுக்கு மேலாக வைத்துள்ளார் என்றும், ஆம் ஆத்மி கட்சியின் கொள்கை எப்போதும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவே உள்ளது எனவும் சூர்யா கூறியுள்ளார்.
இந்நிலையில் கெஜ்ரிவாலுக்கு எதிராகவும், அவரின் மனிதாபிமானமற்ற சிந்தனைக்கு எதிராகவும் யுவமோர்ச்சா அமைப்பினர் நடத்தும் போராட்டங்கள் நாடு முழுவதும் தொடரும் . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.