Categories
தேசிய செய்திகள்

டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 46ஆக உயர்வு!

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் வன்முறையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் கடந்த 23ம் தேதி சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். கோகுல்புரி பகுதியில் கல்வீச்சு சம்பவத்தில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த தலைமைக்காவலர் ரத்தன் லால் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்று உயிரிழந்துவிட்டார்.

மேலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வன்முறையில் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது. தற்போது வன்முறை குறைந்த நிலையில் டெல்லியில் இயல்பு நிலையில் திரும்பி வருகிறது.

Categories

Tech |