Categories
தேசிய செய்திகள்

டெல்லி வன்முறையில் முதல்முறையாக…. குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!!!

குடியுரிமை திருத்தச்சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் சுமார் 53 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த வன்முறையின் போது வீடுகள் உடைக்கப்பட்டு, ஆங்காங்கே தீவைப்பு, கொள்ளை சம்பவங்களும் அரங்கேறியது. இதனையடுத்து டெல்லியில் நடந்த வன்முறையின் போது, டெல்லியில் வசித்து வரும் மனோகரி என்ற மூதாட்டியின் வீட்டை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியதோடு மட்டுமல்லாமல், வீட்டில் உள்ளவற்றை கொள்ளைடித்துவிட்டு தீ வைத்த சம்பவம் உறுதியானது.

எனவே இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கு விசாரணையின் போது, தினேஷ் என்பவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றபோது, குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 12,000 ரூபாய் அபராதமும், விதித்து நீதிமன்றம் ஆணையிட்டது. மேலும் டெல்லி வன்முறை சம்பவத்தில் ஒரு நபர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு அந்த நபருக்கு தண்டனை வழங்குவது இதுவே முதல் முறையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |