டெல்லி வன்முறையை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் கடந்த 23ம் தேதி சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடித்தினர். மேலும் ஒரு சில இடங்களில் துப்பாக்கி சூடும் தடத்தப்பட்டது. இந்த வன்முறையில் இதுவரை ஒரு தலைமை காவலர் உட்பட 46 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு எதிர்கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று டெல்லி வன்முறையை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராகுல்காந்தி, சசிதரூர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.