Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

டெல்லி வன்முறையோடு தொடர்பா ? பதற வைத்த காலிஸ்தான்… உஷாராக கண்காணிக்கும் மத்திய அரசு …!!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இரண்டு மாதங்களாக நடந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று டிரக்டர்  பேரணி நடத்தியதில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு காரணம் விவசாயிகள் அல்ல, விவசாய போர்வையில் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டதாக விவசாய சங்கங்கள் தெரிவித்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல் இந்த போராட்டத்தின்போது டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட போராட்டக்குழு அங்குள்ள கம்பத்தில் சீக்கிய மத கொடியை ஏற்றினர். நேற்று நாடு முழுவதும் குடியரசு தினம் அனுசரிக்கப்பட நிலையில் இப்படி ஒரு சம்பவம் நாட்டிற்கே அவமானம், இது தேச விரோத செயல், இதற்குப் பின்னால் காலிஸ்தான் போன்ற அமைப்புகள் துணையாக இருக்கின்றன, என்றெல்லாம் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் டிசியில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருவது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய விவசாய போராட்ட வன்முறைக்கும், காலிஸ்தான் அமைப்புக்கும் சம்மந்தம் இருக்குமோ என விவாதம் கிளம்பியுள்ளது.

Categories

Tech |