டெல்லி மக்களவையில் வன்முறை தொடர்பாக இன்று விவாதம் நடைபெறுகிறது. இதில் அரசியல் நிலவரம் பற்றிய விவாதமும் நடைபெறலாம்,என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மாதம் 2-ஆம் தேதி முதல் நடைபெற்று கொண்டிருக்கிறது . இதில் டெல்லி வன்முறை தொடர்பாக விவாதம் நடத்துவதற்காக கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளிலும் தொடர்ந்து 5 நாட்கள் அலுவல் பணிகள் முடங்கியது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 4 நாள் விடுமுறைக்குப் பின்னர் இன்று மீண்டும் கூடுகின்றது. இதனை தொடர்ந்து டெல்லி வன்முறை தொடர்பாக, விவாதம் நடைபெறவிருக்கிறது. எனவே மத்தியப்பிரதேசத்தில் தற்பொழுது நிலவி கொண்டிருக்கும் அரசியல் தொடர்பான விவகாரமும் நாடாளுமன்த்தில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.