Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு…. கருப்பு பேட்ஜுடன் ஆர்ப்பாட்டம்…. களமிறங்கிய பிஎஸ்என்எல் ஊழியர்கள்….!!

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பிஎஸ்என்எல் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்

பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க கிளை தலைவர் வாலீசன் தலைமையில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று காலை திருப்பூரில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விளக்க அட்டைகள் மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

ஓய்வூதியர் சங்க மாநில பொறுப்பாளர் சவுந்திரபாண்டியன், மாநில உதவி செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட பொறுப்பாளர் கல்யாணராமன், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்க மாவட்ட பொறுப்பாளர் விஸ்வநாதன் ஆகியோர் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர். சங்க நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது டெல்லி போராட்டத்தில் பங்கேற்று இறந்த விவசாயிகள் மற்றும் வெண்மணி தியாகிகளுக்கு  அஞ்சலி செலுத்தப்பட்டது.

Categories

Tech |