விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க கோரி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் நவம்பர் 26ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் பரிந்துரைகளை விவசாயிகள் ஏற்காததால் போராட்டம் நீடித்து வருகிறது.
இதனிடையே விவசாயிகள் போராட்டம் குறித்து இன்று மாநிலங்களவையில் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் எம்பிக்கள் ஆனந்த் சர்மா, மனோஜா உள்ளிட்டோர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீசை வழங்கினார்.
இதற்கிடையே துறைமுக ஆணைய மசோதா, மருத்துவ ரீதியிலான கருகளைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.