Categories
சினிமா தமிழ் சினிமா

டெல்லி ஷாப்பிங் மாலில் கூலாக நடந்து செல்லும் தளபதி… செம வைரலாகும் வீடியோ…!!!

நடிகர் விஜய் டெல்லியில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் நடந்து செல்லும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவரின் 65-வது படமான பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார் . இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் ‌. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

https://twitter.com/BeastFiIm/status/1441648592792408077

சமீபத்தில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு டெல்லி சென்றது. மேலும் விமான நிலையத்திற்குள் விஜய் செல்லும் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் நடிகர் விஜய் கூலாக நடந்து செல்லும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |