Categories
தேசிய செய்திகள்

டெல்லி ஷாஷீன் பாக்கில் 144 தடை உத்தரவு… நூற்றுக்கணக்கான போலீசார் குவிப்பு!

டெல்லியில் 2 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வரும் ஷாஷீன் பாக்கில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஷாஷீன் பாக்கில் ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ஷாஷீன் பாக்கில் போராடும் பெண்களை விரட்டி அடிக்க இந்து சேனா அழைப்பு விடுத்திருந்தது கலவரத்தை தூண்டும் வகையில் இந்து சேனா அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து ஷாஷீன் பாக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது.

ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது. வன்முறையாளர்கள் கடைகள், வீடுகளுக்கு தீ வைத்தும், கல், செங்கல், பாட்டில்களை வீசியும் பயங்கர மோதலில் ஈடுபட்டனர். சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. இந்தக் கலவரத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |