இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக இவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தனது கருத்தை கூறியுள்ளார்..
தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததை அடுத்து, டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து, விலகி அதிர்ச்சி கொடுத்தார் விராட் கோலி.. இதையடுத்து இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக யாரை நியமிப்பார்கள் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
பல்வேறு முன்னாள் வீரர்களும் இவரை தேர்வு செய்தால் கரெக்டாக இருக்கும் என்று தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக இவரை தேர்வு செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தனது கருத்தை கூறியுள்ளார்..
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய அணியில் மூன்று வகை கிரிக்கெட் போட்டியிலும் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மா திகழ்கிறார். எனவே அவரை டெஸ்ட் கேப்டனாக தேர்வு செய்வதில் எந்தத் தவறும் கிடையாது. இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தான் நானும் நினைக்கிறேன்.. அதில், எந்த மாற்றுக் கருத்தும் எனக்கு கிடையாது.
ஆனால் தற்போது இந்திய அணியின் நிலையை வைத்து அனுபவமும், தகுதியும் வாய்ந்த ஒரு வீரரை தேர்வு செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் தான் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வாய்ப்பு இருக்கிறது.கடந்த சில ஆண்டுகளாக நான் கவனித்து வந்ததில், ரோகித் சர்மா மிகச் சிறந்த ஆட்டக்காரர் ஆகவும், நல்ல கேப்டனாகவும் செயல்பட்டு வருகின்றார்.
ரோகித் சர்மா இன்னும் 3 – 4 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்புள்ளது. தென் ஆப்பிரிக்கா தொடரின் போது காயம் காரணமாக அவரால் இந்திய அணியில் இடம் பெற முடியவில்லை.. இதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் வேளையில் அணி வலுப்படும் என்று தெரிவித்துள்ளார்..
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இவரை தேர்வு செய்யுங்கள் என்று கே.எல் ராகுல் மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.. இருந்தாலும் இந்திய அணி தற்போது இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கிறது. எனவே ரோகித் சர்மாவை டெஸ்ட் கேப்டனாக தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.