சென்னையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து இன்று ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 329 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
https://twitter.com/middlestump4/status/1360597854717419523
நேற்றைய போட்டியில் பண்ட் மற்றும் ஸ்டோக்ஸ் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதாவது ஸ்டோக்ஸ் எதையோ கூறும்போது ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய மறுக்கிறார். அதன் பின்பு அந்த ஓவர் முடிவடைந்த நிலையில் இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் நடுவர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி உள்ளார்.
இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் என்ன என்பது குறித்து தெரியவில்லை. எனினும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் “பண்ட்,பண்ட்” என்று கூச்சலிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.