பிரபலமான டெஸ்லா கம்பெனியை உருவாக்கியவர் எலான் மஸ்க் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் டெஸ்லா கம்பெனியை கடந்த 2003-ம் ஆண்டு Martin Eberhard, Marc Tarpenning என்ற 2 பேர்தான் உருவாக்கினார்கள். இவர்கள் 2 பேரும் சேர்ந்துதான் எலக்ட்ரிக் காரை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகு நிக்கோலஸ் டெஸ்லா என்ற அறிவியலாளர் இன் பெயரிலிருந்து டெஸ்லா என்ற கம்பெனியை உருவாக்கியுள்ளனர். இவர்கள் 2 பேரும் டெஸ்லா கம்பெனியை உருவாக்கி இருந்தாலும் அதில் எலக்ட்ரிக் கார்களை உருவாக்குவதற்கு அவர்களிடம் போதிய அளவிற்கு பணம் இல்லை.
இதனையடுத்து தான் கடந்த 2004-ம் ஆண்டு எலான் மஸ்க் 6.35 மில்லியன் டாலர் டெஸ்லா கம்பெனியில் முதலீடு செய்தார். இந்த கம்பெனி நன்றாக செயல்படுவதை பார்த்து 2004-ம் ஆண்டு எலான் மஸ்க் கம்பெனியின் சிஇஓ ஆக பொறுப்பேற்று கொண்டார். இருப்பினும் Martin Eberhard, Marc Tarpenning ஆகிய 2 பேரும் டெஸ்லா கம்பெனியில் வேலை பார்க்கின்றனர். இவர்கள் 2 பேரும் டெஸ்லா கம்பெனியை உருவாக்கியிருந்தாலும் அதை நல்ல நிலைமைக்கு எடுத்துச் சென்ற பெருமை எலான் மஸ்க்கைதான் சேரும்.