டெஸ்லா நிறுவனம் இந்திய அரசுக்கு தங்கள் இறக்குமதிக்கான வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இந்த டெஸ்லா நிறுவனம் மின்சார கார் உற்பத்தி செய்து வருகிறது. இது உலகளவில் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். தற்போது டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவிலும் விற்பனை செய்து வருகிறது. சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் இந்திய அரசுக்கு தங்கள் இறக்குமதிக்கான வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து டெஸ்லா நிறுவனத்தின் இந்த கோரிக்கை தொடர்பாக காங்கிரஸ் எம்.பி நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றை எழுப்பினார். இதற்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. அதில் மத்திய கனரக தொழில்துறை மந்திரி கிருஷ்ணன் பால் கூறுகையில் டெஸ்லா நிறுவனம் தங்களது உற்பத்தியை சீனா நாட்டில் மேற்கொண்டு அந்த மின்சார கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
மேலும் சீன வேலையாட்களையும், இந்திய சந்தையையும் பெற டெஸ்லா நிறுவனம் விரும்புகிறது. அது மோடி அரசாங்கத்தில் இந்திய சந்தையை பெறவேண்டுமானால் அவர்களது வேலை வாய்ப்புகளை இந்தியர்களுக்கே வழங்க வேண்டும் என்பதே எங்கள் அரசின் கொள்கையாகும். மின்சார கார் உற்பத்தி இந்தியாவில் தொடங்கும்வரை டெஸ்லா நிறுவனத்திற்கு இறக்குமதி வரியில் சலுகை கிடையாது என்றார்.