டெஸ்லா நிறுவனம் புதிய வகை வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்தாததால் டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 62 லட்சத்து 14 ஆயிரம் கோடியாக குறைந்துவிட்டது.
டெஸ்லா மோட்டார்ஸ் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தானுந்து நிறுவனம். மின்சாரத்தினால் இயங்கும் தானுந்துகளை மட்டுமே டெஸ்லா உருவாக்குகிறது. இந்நிறுவனம் மின் சேமிப்புக் கலன்களையும் விற்பனை செய்கிறது. 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இதுவரை டெஸ்லா ரோட்ஸ்டர், மாடல் எஸ், மாடல் எக்சு, மாடல் 3 ஆகிய மின்னுந்துகளைத் தயாரித்துள்ளது. எலான் மஸ்க் இதன் நிறுவனர் ஆவார்.
டெஸ்லா நிறுவனம் மின்சார கார் தயாரிப்பில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான்காம் காலாண்டில் 3,௦5,840 வாகனங்களை தயாரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் காலகட்டத்தை விட 70 சதவீதம் அதிகமாகும். ஆனால் 2022-ஆம் ஆண்டில் இந்த புதிய வகை வாகனங்களை சந்தையில் விற்பதற்கு அறிமுகப்படுத்தாததால் முதலீட்டாளர்களை கவர இயலவில்லை. இதன் விளைவாக பங்குசந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில் 12% வீழ்ச்சியை பெற்று அதன் சந்தை மதிப்பு 62 லட்சத்து 14 ஆயிரம் கோடியாக குறைந்துவிட்டது.