Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

டேங்க் ஆபரேட்டர் எரித்து கொலை…. தாய்-மகள் கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

டேங்க் ஆபரேட்டர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய்-மகளை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிடலகாரம்பட்டி பகுதியில் பச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கர்(32) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சின்னப்பனஅள்ளி ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது வீட்டிற்கு அருகே மாசிலாமணி-சஞ்சீவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிவசங்கரின் வீட்டிற்கு முன்பு மாசிலாமணி- சஞ்சீவி தம்பதியினர் விறகுகளை கொட்டி வைத்தனர். அதனை அகற்றுமாறு கூறியபோது சிவசங்கருக்கும், சஞ்சீவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது கோபமடைந்த சஞ்சீவி, அவரது மகள் லட்சுமி பிரியா ஆகிய இரண்டு பேரும் இணைந்து சிவசங்கர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர். இதனை அடுத்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிவசங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் சஞ்சீவி மற்றும் லட்சுமி பிரியா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Categories

Tech |