Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“டேட்டிங் செய்ய ஆரம்பித்து 11 வருடம் ஆயிடுச்சு”…. கொண்டாட்டத்தில் நகுல்…!!!!!

நடிகர் நகுல் மனைவியுடன் பதினோராவது வருட டேட்டிங்கை கொண்டாடியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நகுல். இவர் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம், தமிழுக்கு என் ஒன்றை அழுதவும் ஆகிய பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்றார்.

https://www.instagram.com/p/CdaDvM_rxuf/?utm_source=ig_embed&ig_rid=d757a1d0-82e9-49e5-84db-1c8264d91a5e

இவர் சென்ற 2014 ஆம் வருடம் ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நகுல் தாங்கள் டேட்டிங் செய்ய ஆரம்பித்து 11 வருடங்களாகிறது என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை முன்னிட்டு புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Categories

Tech |