தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். டேன் டீ என்று நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று இருக்கக்கூடிய 677 குடும்பங்களுக்கு சராசரியாக 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். அதேபோல பயனாளர்களுடைய பங்களிப்பு தொகையான 13 கோடியே 46 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஏற்கும். முதற்கட்டமாக நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள 573 வீடுகள் உடனே ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.