Categories
அரசியல்

டேபிள் டென்னிஸ் (2022): ஆடவர் ஒற்றையர் பிரிவில் 16 வருஷத்துக்கு பின்…. மீண்டும் அசத்திய சரத் கமல்….!!!!

காமன் வெல்த் டேபிள் டென்னிஸ்குழு பிரிவில் இந்திய அணியானது தங்கம் வென்றது. இதையடுத்து கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத்கமல் மற்றும் ஸ்ரீஜா அகுலா ஜோடி தங்கம் வென்று அசத்தியது. அதன்பின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத்கமல் மற்றும் சத்யன் இணை வெள்ளி வென்றது. அதேபோன்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அனுபவ வீரர் சரத்கமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். இந்த நிலையில் நடந்த இறுதிப்போட்டியில் சரத்கமல் இங்கிலாந்து வீரர் பிட்ச்ஃபோர்டை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் முதல் கேமை இங்கிலாந்துவீரர் 13-11 எனும் கணக்கில் வென்றார். அடுத்ததாக சரத்கமல் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 2வது கேமை சரத்கமல் 11-7 எனும் கணக்கில் வென்றார். அடுத்து 3வது கேமை 11-2 எனும் கணக்கில் எளிதாக வென்று அசத்தினார். அதனை தொடர்ந்து 4-வது கேமை 11-6 எனும் கணக்கில் சரத்கமல் வென்றார். இதன் வாயிலாக தொடர்ச்சியாக 3 கேம்களை வென்று அசத்தினார். மேலும் 5-வது கேமிலும் சரத்கமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த விளையாட்டை 11-8 எனும் கணக்கில் சரத்கமல் வென்று அசத்தினார். இதன் மூலமாக சரத்கமல் தங்கப் பதக்கத்தையும் வென்றார். இதனால் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 16 வருடங்களுக்கு பின் மீண்டும் சரத்கமல் தங்கம் வென்றுள்ளார். இறுதியாக ஆடவர் ஒற்றையர் பிரிவில் அவர் கடந்த 2006-ம் வருடம் காமன் வெல்த் போட்டிகளில் தங்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 16 வருடங்களுக்கு பின் மீண்டும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சரத்கமல் தங்கம் வென்று அசத்தி இருக்கிறார்.

அத்துடன் நடப்பு காமன் வெல்த் தொடரில் 40 வயதான சரத்கமல் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வென்று மொத்தமாக 4 பதக்கங்களுடன் திரும்பி இருக்கிறார். இதற்கு முன்பாக நடந்த ஆடவர் ஒற்றையர்பிரிவு வெண்கல பதக்க போட்டியில் இந்திய வீரர் சத்யன் கலந்துகொண்டார். இவர் இங்கிலாந்து வீரர் ட்ரின் ஹாலை எதிர்த்து விளையாடினார். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சத்யன் 11-9,11-3,11-5,8-11,9-11,10-12,11-9 எனும் கணக்கில் போராடி வென்றார். மேலும் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தையும் வென்று கொடுத்தார்.

Categories

Tech |