தாய்லாந்தில் நகைக் கடைக்குள் திருடன் சென்று உரிமையாளரை மிரட்டும் போது அவர் வளர்த்த நாய் தூங்கிக்கொண்டிருந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.
தாய்லாந்தை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர் ஹஸ்கி என்ற நாயை வாங்கி அதற்கு லக்கி என்ற பெயர் வைத்து அதை குழந்தை போல செல்லமாக வளர்த்து வந்துள்ளார். மேலும் லக்கிக்கு பாதுகாப்பு பணிக்கான ட்ரைனிங் கொடுத்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று நகைக் கடைக்குள் புகுந்த திருடன் துப்பாக்கியை காட்டி கடையின் உரிமையாளரை மிரட்டி பணத்தை திருடிச் சென்றுள்ளார். அப்பொழுது காவல் காக்க வேண்டிய லக்கி நாய் படுத்து தூங்கிக் கொண்டு இருந்துள்ளது.
மேலும் கடையின் உரிமையாளர் கடைசி நேரத்திலாவது லக்கி எழுந்து திருடனை கடித்துக் குதறும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார். ஆனால் கடைசிவரை லக்கி தூக்கத்திலிருந்து எழுந்திரிக்கவே இல்லை. இதனால் வருத்தமடைந்த கடைஉரிமையாளர் “எனது நாய் கடையை பாதுகாக்காமல் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த நினைத்திருக்கிறது” என்று கூறியுள்ளார். இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.