Categories
தேசிய செய்திகள்

டேய் நா ஆத்தா வந்துருக்கேன் டா… “எங்க ஊர்ல யாருக்கும் தடுப்பூசி போடாத”… என்னா பெர்பார்மன்ஸ்… ஓடிய ஊழியர்கள்..!!!

கொரோனா தடுப்பூசி போடுவதை தவிர்க்க அருள் வந்து சாமி ஆடுவது போல் கிராமத்தினர் சிலர் நடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், யாதகிரி மாவட்டம் ஹீலகள் கிராமத்தில் வசித்து வரும் மக்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டுவதாக சுகாதார துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் அந்த கிராமத்திற்கு விரைந்து தடுப்பூசி போட மறுத்த கிராம மக்களை சமாதானமாகப் பேசி தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அந்த சமயத்தில் அங்கிருந்த மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் தங்களுக்கு இறையருள் வந்துவிட்டதாக திடீரென நாடகமாடினார். மேலும் அவர்கள் தடுப்பூசி போட எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அவர்களை சமாதானப் படுத்த முயன்ற சுகாதார துறையினரின் முயற்சி வீண்போனது போல் அனைவரும் ஒருமையில் பேசியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுகாதாரத்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். மக்களை கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க வைப்பதற்காக சுகாதாரத்துறையினர் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆனால் இன்னும் சில கிராமங்களில் வதந்திகளை நம்பி தடுப்பூசி போட மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர் என்பது கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Categories

Tech |