ஊரடங்கால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே சாராயம் தயாரித்த நெல்லையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 10-ஆம் நாள் முதல் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நெல்லை சி. என் கிராமப் பகுதியைச் சேர்ந்த உடையார், சூர்யா ஆகிய இருவர் வீட்டிலேயே ஊறல் செய்து சாராயம் தயாரித்துள்ளன. அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு வித்தியாசமான வாசனை வரவே சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசாரின் வருகையை அறிந்த இருவரும் வீட்டில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். இருவர் ஓடுவதைக் கண்டு வீட்டினுள் சென்று பார்த்தபோது சாராயம் காய்ச்ச ஊறல்கள் போடப்பட்டு வைக்கப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய இருவரையும் கண்டு பிடித்து கைது செய்தனர்.