Categories
சினிமா தமிழ் சினிமா

“டைட்டானிக் தருணத்தை உணர்கிறேன்”…. புகைப்படத்துடன் சாயிஷா போட்ட ட்வீட்…. வைரல் பதிவு….!!!!

நடிகை சாயிஷா  கணவர் ஆர்யாவுடன் சேர்ந்திருப்பதுபோல இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஆர்யா “அறிந்தும் அறியாமலும், நான் கடவுள்,  மதராசப்பட்டினம், பாஸ் (எ) பாஸ்கரன், ராஜா ராணி, ஆரம்பம், டெடி, சார்பட்டா பரம்பரை” முதலான அதிக திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆர்யா “கஜினிகாந்த்” திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாய்ஷாவுடன் காதல் ஏற்பட்டது.

2019 ஆம் வருடம் மார்ச்சில் ஆர்யாவும் சாயிஷாவும் திருமணபந்தத்தில் இணைந்தார்கள். சாயிஷா திருமணமான பிறகும் தொடர்ந்து படத்தில் நடித்து வருகிறார். இந்தகாதல் தம்பதியினருக்கு சென்ற வருடம் ஜூலை 23ஆம் நாள் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் சாயிஷா அவருடைய இன்ஸ்டா பக்கத்தில், கணவருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். கப்பலில் இருவரும் சேர்ந்து கைகோர்த்து நிற்பது போல இருக்கும் புகைப்படத்திற்கு “டைட்டானிக் தருணத்தினை உணர்த்துவதை போல் உள்ளதாக” சாயிஷா பதிவு செய்துள்ளார். இப்புகைப்படம் ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறது.

https://www.instagram.com/p/CZQxf2wLXPy/?utm_source=ig_web_copy_link

Categories

Tech |