காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு குறித்த போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் எழுதி இயக்குக்கிறார். இப்படத்தை ரௌடி பிக்ச்சர்ஸ் மற்றும் செவென் ஸ்க்ரீன் ஸ்டடூடியோஸ் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டராக உள்ளனர்.
காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது இப்படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு குறித்து போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி இப்படத்தின் டீசர் இன்று 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் தான் தற்போது ரசிகர்களை பெருமளவில் ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில் டைட்டானிக் பட பாணியில் விஜய் சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா இருவருடன் நின்றபடி போஸ் கொடுத்துள்ளார்.