Categories
உலகசெய்திகள்

“டைட்டானிக் விபத்து” 14 வருடம் முன்பே எப்படி கணித்தார்….? புத்தகத்தால் குழம்பும் மக்கள்…!!!!

டைட்டானிக் விபத்து குறித்து 14 வருடங்களுக்கு முன்பே ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

கடந்த 1912-ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இந்த விபத்து குறித்து 14 வருடங்களுக்கு முன்பே கணிக்கப்பட்டது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் அப்படி ஒரு உண்மை சம்பவம் நடந்துள்ளது. அதாவது Margon Robertson என்பவர் கடந்த 1898-ம் ஆண்டு The wreck of the Titan என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். இந்த புத்தகத்தில் டைட்டன் என்ற கப்பல் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியதால்  ஏராளமானோர் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதேப்போன்று டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

அதுமட்டுமின்றி புத்தகத்தில் உள்ள டைட்டன் கப்பலுக்கும், கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலுக்கு நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது. அதாவது புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த டைட்டன் கப்பலின் நீளமும், டைட்டானிக் கப்பலின் நீளமும் 800 அடி இருந்துள்ளது. இந்த 2 கப்பல்களிலும் 2,000 பயணிகள் இருந்துள்ளனர். இந்த 2 கப்பல்களும் ஒரே மாதிரியான வேகத்தில் சென்று பனிப்பாறையில் மோதியுள்ளது. மேலும் 2 கப்பல்களின் விபத்தும் நள்ளிரவு நேரத்தில் நடந்துள்ளது. ஒரு புத்தகத்தில் 14 வருடங்களுக்கு முன்பே ஒரு விபத்து குறித்து துல்லியமாக கணிக்கப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

Categories

Tech |