பிக்பாஸ்-4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக போட்டியாளர்களுக்கு கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வெளியான இரண்டு புரோமோக்களிலும் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர் மற்றும் சுவாரஸ்யம் குறைவாக செயல்பட்ட போட்டியாளர்களை தேர்ந்தெடுத்தனர் . அதில் டாஸ்க்கில் ஈடுபாடு குறைவான போட்டியாளராக சிவானி மற்றும் கேபி தேர்வு செய்யப்பட்டு ஓய்வெடுக்கும் அறைக்கு அனுப்பப்பட்டனர் .
#Day74 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/kk980QpWMq
— Vijay Television (@vijaytelevision) December 17, 2020
தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் பெஸ்ட் மட்டும் வொர்ஸ்ட் போட்டியாளர்கள் தேர்வு செய்யும்போது ஆரி கூறியது குறித்து பாலாஜி,ஆஜித், ரம்யா ஆகியோர் பேசுகின்றனர். அதில் பாலாஜி ‘டைட்டில் வின் பண்ண எனக்கு தகுதி இல்லன்னு ஆரி சொல்லுகிறார் , நான் கேட்டேனா? எனக்கு தகுதி இருக்கா இல்லையான்னு’ என்கிறார் . இதையடுத்து ஆஜித், ரம்யா இருவரும் பேச அப்போது பாலாஜி ‘இப்படியே போனா நாமளும் குரூப் ஆகிட வேண்டியது தான் . நானும் குரூப்பிசம் பண்ண போறேன் . யாராவது ஏன் குரூப்ல சேரனும்ன்னா சேர்ந்துகோங்க ‘ என கலாய்க்கிறார் .