Categories
உலக செய்திகள்

“டைனோசர் கால ராட்சத முதலை” வாத்தை வேட்டையாடும்…. வெளியான வைரல் வீடியோ…!!

ராட்சத முதலை ஒன்று வாத்தை வேட்டையாடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள உள்ள சதுப்பு நில பகுதிகளில் ஆயிரக்கணக்கான முதலைகள் வாழ்கின்றன. குறிப்பாக ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள சதுப்புநில பகுதிகளில் ஏராளமான முதலைகள் வாழ்கின்றன. இந்த முதலைகள் சிலவை மிகவும் நீளமானதாகவும், அபரிவிதமான வளர்ச்சியுடன் ஆபத்தானதாக காணப்படுகிறது. இந்நிலையில், ஃபுளேரிடா மாகாணத்தின் லிஸ்பெர்க் பகுதியில் உள்ள சதுப்புநிலத்தை பார்ப்பதற்காக கேவின் ஸ்டிபி மற்றும் கேஸ் கவு ஆகிய இருவரும் சென்றிருந்துள்ளனர்.

அப்போது சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்த போது பயங்கரமான முதலை ஒன்று தண்ணீரின் மேற்பரப்பில் இருந்த வாத்தை வேட்டையாடியதை கண்டுள்ளனர். இதையடுத்து, அவர்கள் உடனடியாக தங்கள் செல்போனில் பெரிய முதலை வாத்தை வேட்டையாடுவதை வீடியோ எடுத்துள்ளனர். வார்த்தை இலாவகமாக வேட்டையாடிய அந்த முதலை ராட்சத அளவில் 13 அடி நீளம் கொண்டதாக இருந்துள்ளது. அவ்வளவு நீளம் கொண்ட அந்த முதலையை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் தாங்கள் எடுத்த வீடியோவை அவர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, அந்த வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில் நெட்டிசன்கள் பலரும் இந்த முதலை டைனோசர் காலத்தில் உள்ள முதலையின் நீளம் உடையது எனவும், ஃபுளோரிடாவில் இது மற்றுமொரு நாள் எனவும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |