Categories
உலக செய்திகள்

டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் வெளியேற்றம்!

ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தபட்டிருந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து 3,711 பேருடன் ஜப்பான் சென்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.

கப்பலில் உள்ள ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வைரஸ் பரவாமல் இருக்க பிப்.,19 வரை அங்கேயே கப்பல் நிற்கும் என ஜப்பான் ஏற்கனவே கூறியுள்ளது. அந்த சொகுசு கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 210ஆக உயர்ந்துள்ளது. அதில்132 பணியாளர்கள் மற்றும் 6 பயணிகள் என மொத்தம் 138 இந்தியர்கள் கப்பலில் சிக்கி இருக்கிறார்கள்.

இதில் இரண்டு பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியான நிலையில் கப்பலில் உள்ள 400 அமெரிக்கர்களை மீட்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. அந்நாட்டு வெளியுறவுத்துறை 2 மீட்பு விமானங்களை அனுப்பி அவர்களை மீட்டுள்ளது. இந்நிலையில் இந்த கப்பலில் உள்ளவர்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பயணிகளை வெளியேற்றியுள்ளார். பரிசோதனையில் கொரோனா இல்லை என உறுதியான பயணிகள் 14 நாட்களுக்கு பின் அனுப்பியுள்ளனர்.

Categories

Tech |