Categories
தேசிய செய்திகள்

டைம் முடிஞ்சிருச்சி…. இனி வருமான வரி செலுத்தாதவர்கள் என்ன செய்யனும்….? இதோ தெரிஞ்சுக்கோங்க….!!!!

2021-2022-ம் நிதி ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்து விட்டது. கடைசி தேதி நீட்டிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்த நிலையில் நீட்டிக்கப்படவில்லை. இருப்பினும் இனி வருமான வரி தாக்கல் செய்ய முடியுமா? இன்னும் வருமானவரி தாக்கல் செய்யாதவர்கள் என்ன செய்ய வேண்டும்? அறிவிக்கப்பட்ட கடைசி தேதிக்குப் பிறகும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை வருமானவரி தாக்கல் செய்ய முடியும். ஆனால் கடைசி தேதிக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் வருமான வரி தாக்கல் தாமத ரிட்டன்களாக கருதப்படும்.

இதற்கு வருமான வரி செலுத்துபவர்கள் தாமத கட்டணமும் சேர்த்து செலுத்த வேண்டும். அதாவது ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு இருப்பவர்கள் தாமத கட்டணம் ஆயிரம் ரூபாயும், ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கு அதிகமாக இருப்பவர்கள் ஐயாயிரம் ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும். ஒரு வேளை வருமான வரி விலக்கு வரம்புக்கு உட்பட்டவராக இருந்தால் அபராதம் செலுத்த தேவையில்லை.

வருமானவரி விலக்கு வரம்பு யாருக்கு எவ்வளவு? என்றால், 60 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தால் வருமானம் 2.5 லட்சம் ரூபாய் வரை இருந்தால் அவர்களுக்கு வரி விலக்கு உண்டு. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு வரி விலக்கு உண்டு. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு வருமான வரி விலக்கு உண்டு.

Categories

Tech |