கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் ராகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டார் தொகுதியில் இருக்கும் டைல்ஸ் கடையில் 31 ஆயிரத்து 752 ரூபாய் கொடுத்து டைல்ஸ் வாங்கியுள்ளார். அந்த டைல்ஸ் வாங்கிய 4 மாதங்கள் இல்லையே ஓட்டைகள் விழுந்து உபயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ராகேஷ் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு டைல்ஸ் கற்களை மாற்றி தருமாறு கேட்டதற்கு கடை உரிமையாளர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனை அடுத்து வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியும் கடை உரிமையாளர் அதனை கண்டு கொள்ளவில்லை.
இதுகுறித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ராகேஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ் உறுப்பினர் சங்கர் ஆகியோர் டைல்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி ராகேஷுக்கு 25 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு மற்றும் டைல்ஸ் வாங்குவதற்காக செலுத்திய தொகை ஆகியவற்றை டைல்ஸ் கடை உரிமையாளர் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் ஒரு மாத காலத்திற்குள் வழக்கு தொகை 5,000 ரூபாயும் கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.