Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டைவ் கேட்ச்..! தரையில் பட்ட பந்து…. பட்லரிடம் மன்னிப்பு கேட்ட வில்லியம்சன்…. ஏமாற்றினாரா?…. விமர்சிக்கும் ரசிகர்கள்… என்ன நடந்துச்சு.!!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பட்லர் அடித்த பந்தை கேன் வில்லியம்சன் அற்புதமான டைவிங் செய்து கேட்ச் பிடித்த பிறகு, அந்த பந்து தரையில் பட்டது தெரியவந்ததும்  அவர் மீது விமர்சனம் எழுகிறது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 போட்டியில் நேற்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பிரிஸ்பேன் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 47 பந்துகளில் (7 பவுண்டரி, 2 சிக்ஸர்) 73 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ்  40 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 52 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளும், டிம் சவுதி, சான்ட்னர், இஷ் சொதி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்..

இதையடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக பிலிப்ஸ் 36 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர் உட்பட 62 ரன்கள் எடுத்தார். மேலும் கேன் வில்லியம்சன் 40 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் மற்றும் சான் கரன் தலா 2 விக்கெட்டுகளும் மார்க் வுட், பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

தொழில்நுட்பத்தின் சகாப்தத்தில், கிரிக்கெட் வீரர்கள் சில ரன்களை கட்டுப்படுத்த அல்லது சேமிக்க பல முயற்சிகளை செய்வார்கள். இருப்பினும், கேன் வில்லியம்சன் பெரும்பாலும் ஒரு ‘நேர்மையான’ வீரராகக் கருதப்பட்டாலும், அவர் கைவிடப்பட்ட கேட்சை ‘கிளைம்’ செய்தபோது அவரது நேர்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. வில்லியம்சன் டைவ் அடித்து தாம் கேட்ச் பிடித்து விட்டோம் என்று அவர் நினைத்தது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..

https://twitter.com/JoeRoot66Fan/status/1587421955418124288

ரசிகர் ஒருவர், கேப்டன் கேன் வில்லியம்சன் ஏறக்குறைய ஒரு பறக்கும் கேட்சை எடுத்தார், ஆனால் பின்னர் கேப்டன் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் பிடித்து விட்டதாக நினைத்து விட்டேன் என மன்னிப்பு கேட்டார். கிரிக்கெட்டின் உத்வேகம் சிறப்பாக உள்ளது. கேன் மீண்டும் இதயங்களை வென்றார் என தெரிவித்துள்ளார்..

 

https://twitter.com/Richard10719932/status/1587362629168730112

 

 

https://twitter.com/GryllidaeC/status/1587361488880164864

https://twitter.com/AkshatOM10/status/1587388322074480640

Categories

Tech |