அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட்டிரம்பின் முதல் மனைவி இவானா (73). இவர் நியூயார்கிலுள்ள தன் வீட்டில் வசித்து வந்தார். நேற்றைய தினம் நியூயார்க் நகர காவல்துறையின் அவசரஉதவி எண்ணிற்கு வந்த அழைப்பின்படி போலீசார் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு இவானா சுயநினைவின்றி கிடந்துள்ளார். இதனால் இவானாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக நியூயார்க் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனார்.
இவ்வாறு இவானாவின் திடீர் மரணத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்றும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின் அவரது இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டொனால்ட்டிரம்பின் முதல் மனைவியான இவானா 1992 ஆம் ஆண்டு டிரம்பிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார். இவர் டொனால்ட் ஜூனியர், எரிக்டிரம்ப் மற்றும் இவாங்கா டிரம்பின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.