அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு பைத்தியக்காரர் என ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே புகைச்சல் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு பைத்தியக்காரர் என ஹாசன் ரூஹானி விமர்சித்துள்ளார். ஈரான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற புதன்கிழமை (டிச.23) கூட்டத்தில் கலந்துகொண்ட அந்நாட்டு அதிபர் ஹாசன் ரூஹானி, அமெரிக்க அதிபரை பைத்தியக்காரர் என விமர்சித்துள்ளார்.மேலும், ஈராக் சர்வாதிகாரி சதாம் உசேனை நினைவுப்படுத்தி அவரை போன்ற விதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.
மேலும் ஹாசன் ரூஹானி கூறுகையில், சதாம் உசேன், டொனால்ட் ட்ரம்ப் இருவரும் எங்கள் மீது போரை திணித்தார்கள். பைத்தியக்காரர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார். இதை நாங்கள் பார்த்தோம். அந்த நாளை பொதுமக்கள் கொண்டாடினார்கள். இது ஒரு வரலாற்று வெற்றி. டொனால்ட் ட்ரம்பின் விதியும் இதைவிட சிறந்ததாக இருக்க வாய்ப்பில்லை” என்றார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானிய படைத்தலைவர் ஒருவரை கொன்றார். அதன்பின்னர் ஈரான் அரசு அலுவலர்கள் டொனால்ட் ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்துவருகின்றனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.